ADDED : ஏப் 15, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தொகுதி 2ம் கட்ட தேர்தல் பயிற்சியில் 21 பேர் ஆப்சென்ட் ஆகினர். திருவாடானை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் தனியார் பள்ளியில் மார்ச் 27 ல் நடந்தது. 2 ம் கட்ட பயிற்சி அதே பள்ளியில் நேற்று நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுவது மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 1816 பேர் பங்கேற்க தேர்தல் பிரிவு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 21 பேர் ஆப்சென்ட் ஆகினர். அவர்களுக்கு மற்றொரு நாளில் பயிற்சி அளிக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
