/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிருக்கு 210 மணி நேரம் பயிற்சி;; வேளாண்துறையால் இயற்கை விவசாயம் குறித்து

ADDED : ஆக 02, 2025 11:06 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்து வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பண்ணை மகளிர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்து 210 மணி நேரம் (26 நாட்கள்) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை விவசாயத்தை அதிகரிக்க வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையம், விரிவாக்க கல்வி இயக்கம், வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வேலையில்லா இளைஞர்கள் மற்றும் பண்ணை மகளிர்கள் 25 பேரை தேர்வு செய்து உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் பயிற்சி ஜூலை 17 முதல் ஆக.,14 வரை 210 மணி நேரம் அளிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குனர் ஜெயபால் கண்காணிப்பில் ராமநாதபுரம் வேளாண் அறிவியல் மையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல்கண்ணன் தலைமையிலான வேளாண் விஞ்ஞானி ஜெகதீஸ் மற்றும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. கணினி உதவியாளர் லட்சுமி ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இயற்கை விவசாய தொழில் நுட்படம், விளைந்த பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்தல், விளம்பர யுக்திகள், திரவ உயிர் உரங்கள் தயாரிப்பு முறைகள், பூச்சிக்கொல்லி, மண்ணிற்கு ஏற்ற பயிர்வகைகள் என தினமும் வேவ்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் மதிய உணவும் வழங்கப்படுகிறது.
பயிற்சி முடிவில் அங்கக மற்றும் உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இயற்கை வேளாண் உற்பத்தி பொருட்களை எளிதாக சந்தைப்படுத்த முடியும். மேலும் இவர்கள் மூலம் மற்ற விவசாயிகளுக்கும் இயற்கை வேளாண்மை குறித்து பயிற்சி வழங்கவும் வழிவகை ஏற்பட்டுள்ளது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.----