/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்டத்தில் 217 முகாம் நடக்கிறது
/
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்டத்தில் 217 முகாம் நடக்கிறது
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்டத்தில் 217 முகாம் நடக்கிறது
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மாவட்டத்தில் 217 முகாம் நடக்கிறது
ADDED : ஜூலை 12, 2025 11:30 PM
ராமநாதபுரம்,: -உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டத்தில் மாவட்டத்தில் 217 முகாம்கள் நடக்கவுள்ளதாக கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்தார். அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஜூலை 15ல் கடலுார் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் துவக்கி வைக்கவுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7 பேரூராட்சிகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் 217 இடங்களில் நடக்கவுள்ளது. நகராட்சிப் பகுதியில் 5 வார்டுகளை ஒருங்கிணைத்து ஒரு முகாம் நடத்தப்படும்.
பேரூராட்சிகளில் இரண்டு பேரூராட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு முகாம் நடத்தப்படும். ஊராட்சிப்பகுதிகளில் 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம் நடத்தப்படவுள்ளது.
ஜூலை 15 முதல் செப்.,30 வரை அட்டவணை தயாரிக்கப்பட்டு முகாம்கள் நடத்தப்படும். இதில் 1745 தன்னார்வலர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விளக்கி கூறும் பணிகள் ஜூலை 8 முதல் நடந்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு 60 முதல் 80 வீடுகளுக்கு சென்று முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முகாம்கள் குறித்து விளக்க பொது மக்கள் கூடும் இடங்களில் பதாகைகள் வைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிக்கான முகாம் எப்போது என தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்.
ஊரகப்பகுதிகளில் 13 அரசுத் துறைகளில் 43 சேவைகளும், நகர் புறத்தில் 15 அரசு துறைகளில் 46 சேவைகளும் நடக்கவுள்ளன.
பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.