/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு
/
திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு
திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு
திருவாடானையில் 22,016 எக்டேர் நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு
ADDED : டிச 05, 2024 05:37 AM
திருவாடானை,: திருவாடானை தாலுகாவில் 22 ஆயிரத்து 016 எக்டேரில் விவசாய நிலங்கள் பயிர் காப்பீடு பதிவு செய்யபட்டுள்ளது.
திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் சாகுபடி பணிகள் நடக்கிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கபட்டது. நவ.,15 கடைசி நாளாக அறிவிக்கபட்டது. ஏராளமான விவசாயிகள் பல்வேறு காரணங்களால் காப்பீடு செய்யமுடியாமல் தவித்தனர். களை எடுப்பு, உரமிடுதல் போன்ற பணிகள், தீபாவளிக்கு தொடர்விடுமுறை என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யமுடியவில்லை. ஆகவே நவ.30 வரை காலநீடிப்பு செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். திருவாடானை தாலுகாவில் 18 ஆயிரத்து 388 விவசாயிகள், 22 ஆயிரத்து 016 எக்டேரில் விவசாய நிலங்களை பதிவு செய்துள்ளனர்.