/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலை பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலை பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலை பறிமுதல்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலை பறிமுதல்
ADDED : பிப் 08, 2025 01:36 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே செங்கல் நீரோடை கடற்கரைப்பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலை, மினி சரக்கு வாகனத்தை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம் பகுதி இலங்கை மிக அருகில்உள்ளதால் இங்கிருந்து அந்நாட்டிற்கு பீடி இலை, சமையல் மஞ்சள், இஞ்சி,ஏலக்காய், போதை பவுடர், கஞ்சா,போதை மாத்திரைகள் எளிதாக கடத்தப்படுகின்றன.
கீழக்கரை செங்கல் நீரோடை கடற்கரையில்இருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்த இருப்பதாக தகவலில் கியூ பிரிவு போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் மினி சரக்கு வாகனம் ஒன்றில் 30 பண்டல்களில் 2400 கிலோ பீடி இலைகள் இருந்தன. போலீசாரை பார்த்தவுடன் கடத்தல்காரர்கள் தப்பி ஓடினர்.
சரக்கு வாகனம், பீடி இலையை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.