ADDED : ஆக 08, 2025 02:54 AM
கீழக்கரை: ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனையில் 24வது நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. ஏர்வாடி அரசு மனநல மருத்துவமனை வளாகத்திற்குள் இயங்கி வரும் எம்.எஸ். செல்ல முத்து அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது.
இங்கு 2001ம் ஆண்டில் ஏர்வாடி தர்கா பகுதியில் இயங்கி வந்த தனியார் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநோயாளிகள் 28 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்களின் நினைவாக மறுவாழ்வு மையம் சார்பில் பய னாளிகள், ஊழியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், உறுதிமொழி எடுத்தும் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது.
மனநல டாக்டர் அர்சித் காட்கீல் தலைமை வகித்தார். செவிலியர் கண் காணிப்பாளர் ராஜகுமாரி மற்றும் காப்பக சமூகப் பணியாளர் மாடசாமி உட்பட பலர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.