ADDED : மார் 15, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் பகுதி யில் குடிநீர் ஆதாரத்தை அதிகரிக்க ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 25 ஊருணிகள் புனரமைத்து ஒன்றோடு ஒன்றாக இணைத்து பாதுகாப்பதற்கான பணி துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை உபரி நீர், மழைநீர் சேமிக்கப்படும். இதனால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் பூமியில் உவர்ப்பு தன்மை குறைந்து நல்ல தண்ணீர் கிடைக்கும்.
கரைப் பகுதி பலப்படுத்தப்பட்டு பூங்கா, நடைபயிற்சி தளம், விளையாட்டு சாதனம் அமைக்கப்படும். இதனால் ராமநாதபுரம் நகர் பகுதியில் ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் மக்கள் பயன் அடைவர் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
