/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்
/
இலங்கைக்கு கடத்தவிருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : அக் 06, 2024 04:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தொண்டி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோவை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த எம்.ஆர் பட்டினம் கடற்கரையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 250 கிலோ கஞ்சா பொட்டலங்களை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடற்கரையில் பதுக்கி வைத்திருந்து யார் என்பது குறித்து ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.