/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில் மறியலுக்கு முயன்ற வி.சி.க., வினர் 28 பேர் கைது
/
ரயில் மறியலுக்கு முயன்ற வி.சி.க., வினர் 28 பேர் கைது
ரயில் மறியலுக்கு முயன்ற வி.சி.க., வினர் 28 பேர் கைது
ரயில் மறியலுக்கு முயன்ற வி.சி.க., வினர் 28 பேர் கைது
ADDED : டிச 21, 2024 07:22 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற வி.சி.க., வினர் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
அம்பேத்கர் பற்றி அவதுாறாக பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலகக் கோரி வி.சி.க., வினர் ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். கிழக்கு மாவட்டசக செயலாளர் அற்புதக்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் பிரபாகர் தலைமை வகித்தனர். மண்டல துணைச் செயலாளர் விடுதலைசேகரன், மாவட்ட பொருளாளர் பாண்டித்துரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், மனோகரன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் 23 ஆண்கள் 5 பெண்கள் என 28 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.