/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் தமிழில் 281 பேர் ஆப்சென்ட்
/
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் தமிழில் 281 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் தமிழில் 281 பேர் ஆப்சென்ட்
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் தமிழில் 281 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 29, 2025 05:58 AM
ராமநாதபுரம்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் மார்ச் 28ல் துவங்கி ஏப்.,15 வரை நடக்கிறது. நேற்றைய தமிழ்பாடத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 281 பேர் பங்கேற்கவில்லை.
மாவட்டத்தில் 8067 மாணவர்கள், 8326 மாணவிகள், தனித்தேர்வர்களாக 430 பேர் என 16 ஆயிரத்து 823 பேர் 82 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். நேற்று தமிழ் பாடத் தேர்வு நடந்தது. ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.
கலெக்டர் கூறியதாவது:
தேர்வு எழுதும் காது கேளாத, கண்பார்வையற்றோர், உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 136 மாணவர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதும் வகையில் தேவையான கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு பணிகளில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். போதிய குடிநீர் வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தடையற்ற மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தமிழ் தேர்வில் 249 மாணவர்கள், தனித்தேர்வாளர்கள் 32 பேர் என 281 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.