/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகலை ஆசிரியர் தேர்வில் 290 பேர் 'ஆப்சென்ட்'
/
முதுகலை ஆசிரியர் தேர்வில் 290 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 13, 2025 04:01 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் நேற்று நடந்த முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வை 4017 பேர் எழுதினர். விண்ணப்பித்ததில் 290 பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழகம் முழுவதும் முதுகலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நேற்று நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 மையங்களில் தேர்வு நடந்தது. ராமநாதபுரத்தில் தேர்வு எழுத 4307 பேர் விண்ணப்பித் திருந்த நிலையில் 4017 பேர் தேர்வு எழுதினர்.
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சுபாஷினி தலைமையில் 350 அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல் நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.