/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் 2ம் நாள் சோதனை
/
பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில் 2ம் நாள் சோதனை
ADDED : அக் 03, 2024 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:பாம்பன் ரயில் துாக்கு பாலத்தை 2ம் நாளாக திறந்து மூடி ரயில்வே பொறியாளர்கள் சோதனை செய்தனர்.
பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி முடிந்த நிலையில், துாக்கு பாலம் பொருத்தப்பட்டு, இதனை லிப்ட் முறையில் திறந்து மூடும் சோதனையை நேற்று முன்தினம் இரவு ரயில்வே பொறியாளர்கள் நடத்தினர். இச்சோதனை வெற்றிகரமாக நடந்ததது.
இதனைதொடர்ந்து 2ம் நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு மீண்டும் துாக்கு பாலம் 15 மீ., வரை திறந்து மூடப்பட்டது.
இந்த புதிய துாக்கு பாலம் 17 மீ., முதல் 20 மீ., வரை திறந்து மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.