/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் 3 நாட்கள் புத்தகக் கண்காட்சி
/
பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் 3 நாட்கள் புத்தகக் கண்காட்சி
பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் 3 நாட்கள் புத்தகக் கண்காட்சி
பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் 3 நாட்கள் புத்தகக் கண்காட்சி
ADDED : ஏப் 24, 2025 06:50 AM

பரமக்குடி: பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடத்தில் பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி விழா நடந்தது.
வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கூடுதல் நீதிபதி சாந்தி கண்காட்சியை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.
சார்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பிரமணியன், குற்றவியல் நடுவர் நீதிபதி பாண்டிமகாராஜா பங்கேற்றனர்.
மூத்த வக்கீல்கள் தினகரன், இளங்கோவன், ஆதி கோபாலன், பசுமலை, சவுமிய நாராயணன், ஜானகிராமன், முத்து கண்ணன் மற்றும் அனைத்து வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து புத்தக கண்காட்சி நாளை(ஏப்.25) வரை 3 நாட்கள் காலை 10:00 மணி முதல் நடக்க உள்ளது. பொருளாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.