/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் 3 பேர் கைது
/
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் 3 பேர் கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் 3 பேர் கைது
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் 3 பேர் கைது
ADDED : பிப் 01, 2024 02:10 AM

ராமநாதபுரம்:வீட்டுமனையை பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய நிர்வாகப் பொறியாளர், எழுத்தர், ஒப்பந்த ஊழியர் ஆகிய மூவரை ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடியை சேர்ந்தவர் பிரவீன் குமார் 45. இவரது தந்தை இறந்த நிலையில் அவரது பெயரில் இருந்த வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை தன்னுடைய தாயார் பெயருக்கு மாற்றம் செய்வதற்காக பலமுறை ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு அலைந்து வந்தார்.
அதற்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று நிர்வாகப் பொறியாளர் ரவிச்சந்திரன் 52, கேட்டுள்ளார். பணத்தை பதிவு எழுத்தர் பாண்டியராஜ் 48, என்பவரிடம் கொடுக்குமாறு கூறி இருக்கிறார்.
அவர் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஓய்வு பெற்ற ஊழியர் பாலாமணியிடம் 62,பணத்தை கொடுக்குமாறு கூறியிருக்கிறார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் பிரவீன் குமார் புகார் செய்தார்.
நேற்றிரவு 8:00 மணிக்கு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள அலுவலகத்தில் வைத்து பிரவீன் குமாரிடம் இருந்து, பாலாமணி ரூ.10 ஆயிரத்தை வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதில் தொடர்புடைய வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் ரவிச்சந்திரன், எழுத்தர் பாண்டியராஜ் மற்றும் பாலாமணி ஆகியோரை கைது செய்தனர்.