/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கஞ்சாவுடன் சிக்கிய கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது
/
கஞ்சாவுடன் சிக்கிய கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது
கஞ்சாவுடன் சிக்கிய கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது
கஞ்சாவுடன் சிக்கிய கல்லுாரி மாணவர் உட்பட 3 பேர் கைது
ADDED : அக் 24, 2024 04:55 AM

தொண்டி: தொண்டியில் கஞ்சா வைத்திருந்த கல்லுாரி மாணவர் உட்பட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி அனிஷ் நகர் குளம் அருகே கஞ்சா விற்பதால் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன், எஸ்.ஐ., விஷ்ணு மற்றும் போலீசார் நேற்று காலை அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது குளத்தின் கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து தொண்டி கிழக்கு தெரு ஆசிக் 18, புர்கான்அலி 22, சாகுல்ஹமீது 20, ஆகிய மூவரையும் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆசிக் ராமநாதபுரம் தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படிக்கிறார்.