ADDED : அக் 16, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: கிழக்கு கடற்கரை சாலை திருப்பாலைக்குடி 90ம் காலனி கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டனுக்கு வந்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது திருப்பாலைக்குடி கிழக்கு தெரு சீனி நைனா முகமது மகன் முகமது இஸ்மத் அலி 29, காதர் மைதீன் மகன் முகமது ரசாத்கான் 23, மற்றும் ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். முகமது இஸ்மத் அலி, முகமது ரசாத்கான் ஆகியோர் மீது பல வழக்குகள் உள்ளன.