/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கும்பாபிேஷகத்திற்கு தீர்த்தம் எடுக்க ராமேஸ்வரம் வந்தவர்களின் கார் பாலத்தில் மோதி 3 பேர் பலி

ADDED : நவ 24, 2024 02:21 AM

ராமநாதபுரம்:கோயில் கும்பாபிேஷகத்திற்கு ராமேஸ்வரத்தில் தீர்த்தம் எடுத்து திரும்பியவர்களின் கார் ராமநாதபுரம் அருகே பாலத்தில் மோதிய விபத்தில் விவசாயிகள் மூவர் பலியானார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வி.வடமலைபாளையம் கருடாமுத்துார் பகுதியில் அம்மன் கோயில்
உள்ளது. இந்த கோயில் கும்பாபிேஷகத்திற்காக தீர்த்தம் எடுக்க ராமேஸ்வரம் வந்தனர். கார்த்திகேயன் காரில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு சண்முகசுந்தரம் 45, நாகராஜ் 36, கார்த்திகேயன் 33, தீபக் அரவிந்த் 26, வந்தனர்.
நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் தீர்த்தம் சேகரித்துக்கொண்டு காரில் புறப்பட்டனர். காரை தீபக் அரவிந்த் ஓட்டினார். கார் நேற்று மதியம் 12:30 மணிக்கு ராமநாதபுரம் அருகே களத்தாவூர் பகுதியில் வந்த போது ரோட்டோர பாலத்தில் மோதியது.
இதில் சண்முகசுந்தரம் சம்பவ இடத்தில் பலியானார். தீபக் அரவிந்த், நாகராஜ் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாயினர்.
கார்த்திகேயன் காயங்களுடன் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து நடந்த இடத்தில் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் பார்வையிட்டு விசாரித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.