/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் 3 தலைமையாசிரியர்கள்; மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு

ADDED : ஜூலை 12, 2025 04:54 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் 34 அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.சாந்தி விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) நியமிக்கப்பட்டுள் ளார். பேராவூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பா.கனகராணி திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலராகவும் ( தனியார் பள்ளிகள்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலக நேர் முக உதவியாளர் ரவீந்திரன் துாத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலராகவும் (இடைநிலை) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பணியிட மாறுதலில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கே.ஜெயந்தி ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்), பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.