/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கையில் சிறை தண்டனை
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கையில் சிறை தண்டனை
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கையில் சிறை தண்டனை
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கையில் சிறை தண்டனை
ADDED : பிப் 17, 2024 02:12 AM
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் வாடும் ராமேஸ்வரம் மீனவர்களில் 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து பிப்.4ல் மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் இரு படகில் இருந்த 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். நீதிமன்ற வாய்தா நாளான நேற்று 23 பேரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இவர்களில் படகு டிரைவர்கள் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பிரான்சிஸ் மகன் ராபர்ட் 42, கிளமன்ட் மகன் பெக்கர் 27, ஆகிய இருவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனையும், 2வது முறையாக கைதான தங்கச்சிமடம் மரியம்மில்லர் மகன் மெல்சன் 23, என்பவருக்கு 16 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற 20 பேருக்கும் 16 மாதம் சிறை தண்டனை விதித்து தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்து விடுதலை செய்வதாகவும், இவர்களில் யாரேனும் 2வது முறை கைதானால் அந்த சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விடுதலையானவர்களை கொழும்பு அருகே உள்ள முகாமில் போலீசார் தங்க வைத்தனர்.
இவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் சென்னை வருவர். 3 பேருக்கு சிறை தண்டனை விதித்தது ராமேஸ்வரம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஸ்டிரைக்
இந்நிலையில் நேற்றிரவு 8:30 மணிக்கு ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சர்ச் வளாகத்தில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இலங்கையில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனர்.