ADDED : செப் 11, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்;இலங்கைக்கு கடத்திச்செல்லப்பட்ட 300 கோழி, புறாக்களை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
இலங்கை மன்னார் கடலில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து சுற்றிய போது சந்தேகத்திற்கிடமாக வந்த பைபர் கிளாஸ் படகை சோதனையிட்டனர். இதில் 300 கோழி, புறாக்கள் கடத்தி வந்துள்ளனர். இதனை பறிமுதல் செய்து இலங்கை கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்து மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இலங்கையில் கிலோ கோழி இறைச்சி ரூ.1000, புறா ரூ.2000 க்கு விற்கப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் உள்ள கடத்தல்காரர்கள் நாட்டுப்படகில் கள்ளத்தனமாக கடத்தி சென்று இதனை தந்துள்ளனர். இவர்கள் யார் என தமிழக போலீசார் விசாரிக்கின்றனர்.