/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்தப்பட்ட 3000 கிலோ சமையல் மஞ்சள், பீடி இலை பறிமுதல் டிரைவரிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை

ADDED : நவ 09, 2024 11:05 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே தோப்புலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 3000 கிலோ சமையல் மஞ்சள் மற்றும் பீடி இலை பண்டல்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீசார் டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் வேதாளை மரைக்காயர்பட்டினம், குந்துகால், தோப்பு வலசை, களிமண்குண்டு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக கடல் அட்டை, கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள், சமையல் மஞ்சள்,பீடி இலை உள்ளிட்டவை நாட்டுப் படகுகளில் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தோப்புவலசை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அப்பகுதியில் மறைந்திருந்த போது சரக்கு வாகனம் கடற்கரை நோக்கி வந்தது.
இதனைக் கண்ட கியூ பிரிவு போலீசார் அந்த வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர். அதில் 57 மூடைகளில் 3000 கிலோ சமையல் மஞ்சள், 6 பண்டல்களில் 300 கிலோ பீடி இலைகள் இருந்தது. சரக்கு வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் சுவின் 35, சிக்கியதால் அவரிடம் விசாரிக்கின்றனர்.
சமையல் மஞ்சள், பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பீடி இலை பண்டல்கள், சமையல் மஞ்சளை சுங்கத்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.