ADDED : செப் 28, 2024 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி காக்கா தோப்பு பகுதியில் அமைந்துள்ள சண்முகத்தடிமை வேலு சுவாமிகளின் 30ம் ஆண்டு குருபூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை சிறப்பு ஹோமங்கள் மற்றும் சிவலிங்கத்திற்கு பல்வேறு அபிஷேகம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து நாள் முழுவதும் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வேலு சுவாமிகளின் சீடர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.