/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாயுமானவர் திட்டத்தில் 31,977 பேர் பயன்
/
தாயுமானவர் திட்டத்தில் 31,977 பேர் பயன்
ADDED : நவ 24, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில்31,977 பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் முதியோர், மாற்றுத்திறனாளிகள்வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, சர்க்கரை, உள்ளிட்ட ரேஷன் விநியோகிக்க தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. மாதந்தோறும் இரண்டாம் சனி, ஞாயிற்று கிழமைகளில் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது.
இத்திட்டம் தொடங்கிய 3 மாதங்களில் ராமநாதபுரத்தில் உள்ள 775 ரேஷன் கடைகள் மூலம் 31 ஆயிரத்து 977 ரேஷன் கார்டுதாரர்கள் இத் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

