/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவு திருவிழாவுக்கு 3255 பேர் பதிவு
/
கச்சத்தீவு திருவிழாவுக்கு 3255 பேர் பதிவு
ADDED : பிப் 15, 2024 02:52 AM
ராமேஸ்வரம்:-கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவுக்கு 3255 பேர் செல்ல உள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ.,ல் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இங்குள்ள அந்தோணியார் சர்ச் திருவிழா இந்த ஆண்டு பிப்.23, 24ல் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க தமிழகம், கேரளா, கர்நாடக பக்தர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கச்சத்தீவு விழா குழுவிடம் மனு அளித்தனர்.
இதனை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்தது. இதையடுத்து 73 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகளில் 2597 ஆண்கள், 556 பெண்கள் உள்ளிட்ட 3255 பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிப்.23 காலையில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் படகுகளில் மத்திய, மாநில அரசின் பாதுகாப்புடன் கச்சத்தீவுக்கு செல்ல உள்ளனர்.

