/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை தொகுதியில் 33 ஓட்டுச்சாவடி தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பினர்

ADDED : ஆக 21, 2025 11:12 PM
திருவாடானை: திருவாடானை சட்டசபை தொகுதியில் ஏற் கனவே 29 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருவாடானை சட்ட சபை தொகுதியில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 971 ஆண்கள், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 311 பெண்கள், 3 திருநங்கைகள் என 3 லட்சத்து 18 ஆயிரத்து 37 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இத் தொகுதியில் 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுச்சாவடிகளை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஓட்டுச்சாவடியில் 1200 வாக்காளர்கள் எண்ணிக்கை இருந்தால் அதை இரண்டாக பிரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. வாக்காளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், திரு வாடானை சட்டசபை தொகுதியில் ஏற்கனவே 347 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஏற்கனவே 29 ஓட்டுச்சாவடிகள் அதி கரிக்கப்பட்டது. தற்போது மேலும் 4 ஓட்டுச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 33 ஓட்டுச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் 380 ஓட்டுச் சாவடிகள் அமைய வாய்ப்புள்ளது என்றனர்.