/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
3.5 டன் பால் சுறா மீன்கள் இலங்கையில் சிக்கின
/
3.5 டன் பால் சுறா மீன்கள் இலங்கையில் சிக்கின
ADDED : அக் 15, 2025 12:55 AM

ராமேஸ்வரம்:இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் வலையில் 3.5 டன் பால் சுறா மீன்கள் சிக்கியன. இவற்றை வியாபாரிகள் ரூ.45.50 லட்சத்திற்கு வாங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
யாழ்ப்பாணம் அருகே வடமராட்சியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் விசைப்படகில் வங்க கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதில் ஒரு மீனவரின் படகில் 5 முதல் 7 அடி நீளத்தில் 15 ராட்சத பால் சுறா மீன்கள் சிக்கின. இந்த சுறா மீன்கள் 3.5 டன் எடை இருந்தது. இந்த மீனில் புரதம், ஒமேகா -3 அமிலம், வைட்டமின், தாதுக்கள் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளதால் மக்களிடம் அதிக மவுசு உள்ளது.
அதிக சத்து, ருசி நிறைந்த இந்த பால் சுறாவை இலங்கை வியாபாரிகள் கிலோ ரூ.1300 வீதம் ரூ.45.50 லட்சத்திற்கு (இந்திய மதிப்பில் ரூ.13.05 லட்சம்) வாங்கியதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை ஐசில் பதப்படுத்தி இலங்கை சந்தைகள் மற்றும் கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அரிய வகை இந்த பால் சுறா மீன்களை பிடிக்கவோ, விற்கவோ இந்தியாவில் தடை உள்ளது.