ADDED : ஏப் 15, 2026 08:06 PM
பரமக்குடி: பரமக்குடி (தனி) சட்ட சபை தொகுதியில் 366 தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
தொகுதியில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க 323 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் துவங்கி 3 நிலை அலுவலர்கள் என தலா 388 ஓட்டுச்சாவடிக்கும் 1552 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி முகாமில் 19 பேர் ஆப்சென்ட் ஆகிய நிலையில் 1533 பேர் பங்கேற்றனர். கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பொது தேர்தல் பார்வையாளர் ரெஹானா பதுல், பரமக்குடி தேர்தல் நடத்தும் அலுவலர், ஆர்.டி.ஓ., சரவணபெருமாள், தாசில்தார்கள் ராமமூர்த்தி, ஸ்ரீராம் பங்கேற்றனர்.
மேலும் திருவாடானை 51, ராமநாதபுரம் 56, முதுகுளத்துார் 87 மற்றும் பிற மாவட்ட சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அலுவலர்கள் என 173 தபால் ஓட்டுகள் உட்பட மொத்தம் 366 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டது. அப்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்கள் பார்வையிட்டனர்.
*22 பேர் ஆப்சென்ட்:
திருவாடானை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சின்னக்கீரமங்கலத்தில் தனியார் பள்ளியில் 2 ம் கட்ட பயிற்சி அதே பள்ளியில் நேற்று நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கையாளுவது மற்றும் தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 1816 பேரில் 21 பேர் ஆப்சென்ட் ஆகினர். அவர்களுக்கு மற்றொரு நாளில் பயிற்சி அளிக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
--
