ADDED : பிப் 06, 2026 05:31 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிப்.,3 முதல் மாவட்ட அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடக்கிறது. நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிப் படி காலிப்பணியிடங்களில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் ராமேஸ்வரம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 7 ஆண்கள் உட்பட 372 பேரை போலீசார் கைது செய்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் கூறினர்.
