/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொள்முதல் நிலையத்தில் 3771 டன் நெல்
/
கொள்முதல் நிலையத்தில் 3771 டன் நெல்
ADDED : மார் 28, 2025 05:39 AM
திருவாடானை : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஒன்பது நெல் கொள்முதல் நிலையங்களில் 3771 டன் சேகரிக்கபட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திகழ்கிறது. இந்த ஆண்டு அறுவடை துவங்கிய போது திருவாடானை தாலுகாவில் அரசூர், வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை, திருவெற்றியூர், நெய்வயல் ஆகிய ஆறு இடங்களிலும், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஆர்.எஸ்.மங்கலம், சனவேலி, ஆனந்துார் ஆகிய மூன்று இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
சன்னரகம் குவிண்டாலுக்கு ரூ.2450, பொதுரகம் ரூ.2405க்கும் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகள் ஆர்வமாக கொள்முதல் நிலையங்களுக்கு சென்று விற்பனை செய்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கூறியதாவது: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் ஒன்பது இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் திருவாடானை தாலுகாவில் விவசாயிகளிடமிருந்து 2340 டன்னும், ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் 1431 டன் என 3771 டன் நெல் சேகரிக்கபட்டது. கொள்முதல் நெல்லுக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்றனர்.