/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணியில் 38 பவுன் வெள்ளி பொருட்கள் கொள்ளை
/
திருப்புல்லாணியில் 38 பவுன் வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருப்புல்லாணியில் 38 பவுன் வெள்ளி பொருட்கள் கொள்ளை
திருப்புல்லாணியில் 38 பவுன் வெள்ளி பொருட்கள் கொள்ளை
ADDED : ஜன 03, 2025 12:16 AM
திருப்புல்லாணி:ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் புரோகிதர் முத்துகிருஷ்ணன் 51, வீட்டில் 38 பவுன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்புல்லாணி தெற்குத்தெருவைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் சேதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் புரோகிதம் செய்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு இவரது தந்தை இறந்ததால் அதற்கான பூஜையில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றவர் இரவு 10:00 மணிக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்த 38 பவுன் நகைகள், 5 கிலோ வெள்ளி பாத்திரங்கள், பூஜை பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை மர்ம நம்பர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து முத்துகிருஷ்ணன் திருப்புல்லாணி போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சிவசாமி மற்றும் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.