/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: ராமநாதபுரம் சாதனை
/
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: ராமநாதபுரம் சாதனை
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: ராமநாதபுரம் சாதனை
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் 3ம் இடம்: ராமநாதபுரம் சாதனை
ADDED : மே 10, 2024 11:24 PM

ராமநாதபுரம் மாவட்டம் 2022-23 கல்வியாண்டில் மாநில அளவில் 12ம் இடத்திலிருந்து முன்னேறி 3ம் இடம் பெற்றதால் இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறை சாதித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று (மே 10ல்) பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023--24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 15,692 பேர் எழுதினர்.
இதில் மாணவர்கள் 7372, மாணவிகள் 7749 என 15,121பேர் தேர்ச்சி அடைந்து 96.36 சதவீதம் பெற்று மாநில அளவில் 3ம் இடம் பெற்றுள்ளனர்.
2021-22 கல்வி ஆண்டில் 94.06 சதவீதம் பெற்று மாநில அளவில் 5ம் இடம் பெற்றிருந்த நிலையில் 2022- 23ல் பின்னடைவு ஏற்பட்டு 93.27 சதவீதம் பெற்று 12ம் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் 2023-24 கல்வி ஆண்டில் 262 பள்ளிகளில் அரசு பள்ளிகள் 136ல் 64 பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 17, ஆதிதிராவிடர் நலத்துறை 2, 52 தனியார் பள்ளிகள் என 135 பள்ளிகளில்நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ராமநாதபுரம் 3ம் இடம் பெற்றுள்ளது. 64 அரசுப் பள்ளிகள் உட்பட 135 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன்.
இந்த இலக்கை அடைய ஊக்கப்படுத்திய கலெக்டர், கடினமாக உழைத்த பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 500க்கு 495, 494, 489 மதிப்பெண்களை மாணவர்கள் எடுத்துள்னர். எனவே நன்றாக படிக்கும் மாணவர்களை அரசு மாதிரி பள்ளியில் சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் என்றார்.