/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
3வது முறையாக சேதம் பாம்பன் பாலத்தில் ஆபத்து
/
3வது முறையாக சேதம் பாம்பன் பாலத்தில் ஆபத்து
ADDED : அக் 16, 2024 07:18 PM

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில், தேசிய நெடுஞ்சாலை பாலம் அமைத்து, 1988ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இப்பாலத்தில் உள்ள துாண்கள், தடுப்புச் சுவர்கள், மின் கம்பங்களை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரித்து வந்த நிலையில், 2022ல் துாண்கள், தடுப்புச் சுவர்கள், மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.
இந்நிலையில், பாலம் நடுவில் உள்ள பிங்கர் ஜாயின்ட் இரும்பு பிளேட், ஓராண்டில் மூன்றாவது முறையாக மீண்டும் சேதமடைந்தது. இதனுள் உள்ள இரும்பு போல்ட்டுகள் வெளியில் நீண்டபடி உள்ளன. இதனால், கனரக வாகனங்கள் செல்லும்போது சேதமடைந்த இரும்பு பிளேட்கள் சத்தம் எழுப்பி, நீண்டு கொண்டிருக்கும் போல்ட்டுகள் வாகன டயர்களை பதம் பார்க்கின்றன. இதனால், வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.
இதே இரும்பு பிளேட் இந்த ஆண்டில் பிப்., மற்றும் ஜூனில் சேதமடைந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக உடைந்துள்ளது. எனவே, தரமான இரும்பு பிளேட்டை பொருத்தி, எதிர்காலத்தில் விபரீதம் ஏற்படாமல் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

