ADDED : டிச 25, 2024 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஜார் போலீசார் கார்த்திகை ராஜா தலைமையில் மகர் நோன்பு பொட்டல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெரு ஆலடி மகன் வீரப்பெருமாள் 38, கைது செய்யப்பட்டார். ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டு, ரூ. 420 பணம் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் வடக்கு தெருவில் லாட்டரி விற்ற நீலகண்டி ஊருணி, மதுரைவீரன் சந்து பகுதியை சேர்ந்த செந்தில்குமார் 47, கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ரூ.2450 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், ரூ.300 பறிமுதல் செய்தனர். கேணிக்கரை போலீசார் ரோந்தில் செட்டி தெரு பாஸ்கரன் 53, பாரதியார் தெரு ராஜேஷ்கண்ணன் 49 கைது செய்யப்பட்டனர்.