/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 இளைஞர்கள் கைது
/
மூதாட்டியிடம் செயின் பறிப்பு 4 இளைஞர்கள் கைது
ADDED : டிச 28, 2024 07:54 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் கொத்தியார்கோட்டை பகுதியில், மூதாட்டியிடம் செயின் பறித்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கொத்தியார்கோட்டைமாரி 67. இவர் டிச.25ல், விவசாய பணியில் ஈடுபட்டு விட்டு, ரோட்டோரத்தில் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அவ்வழியாக டூ வீலரில் சென்ற இளைஞர்கள், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2.5 பவுன் தங்கச் செயினை பறித்து அங்கிருந்து தப்பினர். இது குறித்து திருப்பாலைக்குடி போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட திருப்பாலைக்குடி காந்திநகரைச் சேர்ந்த விமல்ராஜ் 22, மாதேஷ் 21, ராம செல்வம் 22, பால்குளம் கார்த்திக் 20, ஆகிய நான்கு இளைஞர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து தங்கச் செயினை பறிமுதல் செய்தனர்.