/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
400 ஜெலட்டின் பறிமுதல் மேலும் ஒரு மீனவர் கைது
/
400 ஜெலட்டின் பறிமுதல் மேலும் ஒரு மீனவர் கைது
ADDED : ஜன 25, 2025 07:19 AM

திருவாடானை : கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக ஜெலட்டின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மீனவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் மலைப் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் கடத்தி வரப்படுவது வழக்கமாக உள்ளது. 2024 ஆக.28 இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து டூவீலரில் இரண்டு பேர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர்களை கடத்தி ஓரியூரை நோக்கி சென்றனர்.
வேகத்தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது மூடை தவறி விழுந்து ஜெலட்டின் குச்சிகள் ரோட்டில் சிதறியது. அந்தபக்கமாக ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். எஸ்.பி.பட்டினம் போலீசார் 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ ஒயரை கைப்பற்றினர்.
இந்த வழக்கில் ஏற்கனவே தொண்டி புதுக்குடியை சேர்ந்த செந்தில்குமார் 35, உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று ஜெலட்டின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த புதுக்குடி ராம்குமார் 37, என்பவரை தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்தார்.

