/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெற்றோரை இழந்த குழந்தைகள் 1330 பேருக்கு மாதம் ரூ.4000
/
பெற்றோரை இழந்த குழந்தைகள் 1330 பேருக்கு மாதம் ரூ.4000
பெற்றோரை இழந்த குழந்தைகள் 1330 பேருக்கு மாதம் ரூ.4000
பெற்றோரை இழந்த குழந்தைகள் 1330 பேருக்கு மாதம் ரூ.4000
ADDED : நவ 13, 2024 05:05 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெற்றோரை இழந்த 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 1330 பேருக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தை, தந்தை, தாய் இருவரையும் இழந்தவர்கள், பெற்றோர் இருந்தும் உடல் நலக்குறைவால் வருமானம் ஈட்ட முடியாதவர்களின் குழந்தைகளுக்கு 'மிஷன் வாட்சல்யா' திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மாதம் ரூ.4000 உதவித்தொகை வழங்கி வருகிறது.
2024--25 ம் நிதியாண்டியில் 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கள ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில் 1330 தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளார்.
இதனடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தலைமையிலான பணியாளர்கள் 1330 பேரை ஆன் லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை செய்து வருகின்றனர். இதில் விண்ணப்பம் செய்த பள்ளி, கல்லுாரி படிக்கும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை 18 வயது வரை வழங்கப்படும்.
கல்லுாரி, பள்ளிகளில் படிப்பை நிறுத்தினால் இந்த உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும். இதனை குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். இதில் 65 சதவீதம் குழந்தைகள் தந்தையை இழந்த குழந்தைகள், 70 சதவீதம் பெண் குழந்தைகள் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

