ADDED : அக் 16, 2024 05:15 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்சமாக 46 மி.மீ., மழை பதிவான நிலையில் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை 6:00 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் பதிவான மழை மி.மீ., ல்: ராமநாதபுரம் 4, மண்டபம் 32, ராமேஸ்வரம் 10.20, பாம்பன் 13.60, தங்கச்சிமடம் 15.40, பள்ளமோர்க்குளம் 6, திருவாடானை 37, தொண்டி 46, தீர்த்தாண்டதானம் 23.40, வட்டாணம் 27.20, ஆர்.எஸ்.மங்கலம் 29.40, பரமக்குடி 6.60, முதுகுளத்துார் 7, கடலாடி 19, வாலிநோக்கம் 22.40, கமுதி 35.60, என பதிவானது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பேரிடர், இயற்கை இடர்பாடுகள் தொடர்பாக உதவி எண்கள் 1077, 04567-230060, 83001 75888 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.