/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பார்த்திபனுார் மதகணையில் 474 கன அடி தண்ணீர் திறப்பு
/
பார்த்திபனுார் மதகணையில் 474 கன அடி தண்ணீர் திறப்பு
பார்த்திபனுார் மதகணையில் 474 கன அடி தண்ணீர் திறப்பு
பார்த்திபனுார் மதகணையில் 474 கன அடி தண்ணீர் திறப்பு
ADDED : அக் 17, 2024 05:19 AM

பரமக்குடி: பரமக்குடியில் வெள்ளப்பெருக்கை சமாளிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தயாராக உள்ள நிலையில் பார்த்திபனுார் மதகு அணையிலிருந்து 474 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மதுரையில் இருந்து 1900 கன அடி மழைநீர் வைகை ஆற்றில் வருகிறது. இதனால் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 474 கன அடி தண்ணீர் பார்த்திபனுார் மதகணையை வந்தடைந்தது. இதையடுத்து நீர்வளத் துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் 178 கன அடியும், வலது, இடது பிரதான கால்வாய்களில் தலா 178 கன அடி தண்ணீரும் திறந்து விட்டனர்.
மேலும் மழை வெள்ளச் சேதம் ஏற்படாத வகையில் பாதுகாக்க நீர்வளத்துறை ஒருங்கிணைப்பு அலுவலர், தரக் கட்டுப்பாடு செயற்பொறியாளர் கார்த்திகை பாலன் பார்வையிட்டார். அவர் கூறியதாவது:
வைகை ஆற்றில் தற்போது மழை நீர் வருகிறது. மழை தொடர்ந்தால் நீர்வரத்து அதிகரிக்கும். மேலும் பரமக்குடி பகுதிகளில் வெள்ளப்பெருக்கை சமாளிக்கும் வகையில் மணல் மூடைகள் தயார் நிலையில் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி தேவி, சந்திரமோகன், ராதாகிருஷ்ணன், கண்ணன் உடன் இருந்தனர்.