/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உதவி பேராசிரியர் தேர்வு 48 பேர் ஆப்சென்ட்
/
உதவி பேராசிரியர் தேர்வு 48 பேர் ஆப்சென்ட்
ADDED : டிச 28, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த உதவிப் பேராசிரியர் தேர்விற்கு 48 பேர் வரவில்லை.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 525 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கான தேர்வு செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் நடந்தது.
இதில் 477 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 48 பேர் வரவில்லை. செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார்.

