/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் 480 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்
/
ராமேஸ்வரத்தில் 480 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்
ADDED : ஜன 29, 2025 07:45 AM

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட 480 கிலோ பாலிதீன் பை, கப்புகளை உணவு பாதுகாப்பு, சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரம் நகராட்சி, தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சியில் உள்ள மார்க்கெட், ஓட்டல், டீக்கடைகளில் அரசு தடை விதித்த பாலிதீன் பை, கப், இலைகளை வியாபாரிகள் தாராளமாக விற்கின்றனர். இந்த பாலிதீன் புழக்கத்தால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் நேற்று ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள ஓட்டல், டீக்கடைகள், பெட்டி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், மண்டபம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன், நகராட்சி மேற்பார்வையாளர் ஹமீது, நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்தனர்.
இதில் 480 கிலோ பாலிதீன் பை, கப் இலைகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் உணவுகளை வாழை இலையில் பரிமாறவும், சாம்பார், டீ ஆகியவற்றை அரசு அங்கீகரித்த முறைகளில் விற்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பாலிதீன் பை, கப்புகளை விற்று 2, 3வது முறை பறிமுதல் செய்தால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.5000 மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

