/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெலுங்கானா பக்தர் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவர்கள் 5 பேர் கைது
/
தெலுங்கானா பக்தர் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவர்கள் 5 பேர் கைது
தெலுங்கானா பக்தர் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவர்கள் 5 பேர் கைது
தெலுங்கானா பக்தர் மீது தாக்குதல் ஆட்டோ டிரைவர்கள் 5 பேர் கைது
ADDED : மார் 27, 2025 02:11 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் தெலுங்கானா பக்தரை தாக்கிய 5 ஆட்டோ டிரைவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து சாலை மறியல் நடந்தது.
தெலுங்கானா ஹைதராபாத்தை சேர்ந்தவர் நவீன் 55. இவர் உறவினருடன் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின் தனுஷ்கோடி உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளை காண ஆட்டோவில் சென்று விட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் இறங்கினர்.
அப்போது வாடகை தொடர்பாக நவீன் தரப்பிற்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் நவீனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதில் போலீசார் ஆட்டோ டிரைவர்கள் ஞானப்பிரகாசம் 51, மாரியப்பன் 43, கார்மேகம் 35, முனியசாமி 46, சதீஷ் 36, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களை விடுவிக்க கோரி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் செந்தில்வேல், சம்பத்குமார், கட்சி நிர்வாகிகள் இளங்கோ, ஜெரோன், வெள்ளைச்சாமி உள்ளிட்ட 150 பேர் மறியல் செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.மேலும் ஆட்டோ டிரைவர்கள் ஞானபிரகாசம், மாரியப்பனை சிறையில் அடைத்த போலீசார் மற்றவர்களை ஜாமினில் விடுவித்தனர்.