/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் தினமும் 5 பேர் நாய் கடியால் பாதிப்பு: கட்டுப்படுத்துங்க

ADDED : பிப் 04, 2024 11:24 PM

பரமக்குடி : பரமக்குடி சுற்றுவட்ட பகுதிகளிலிருந்து தினமும் 5 பேர் வரை நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்துகின்றனர். நேற்று இருவர் காயமடைந்துள்ளனர்.
பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக நாய்களுக்கு கு.க., செய்யவில்லை. இதனால் பல மடங்கு நாய்கள் பெருகியுள்ளன.
பருவ நிலை மாற்றம் காரணமாக நாய்களுக்கு சொறி பிடித்து, புண்கள் ஏற்பட்டுள்ளது. இவை வெறிபிடித்து தெருவில் புதிதாக செல்லும் நபர்களை கடிக்கின்றன. பரமக்குடி பாரதிநகரில் நேற்று தெருநாய்கள் கடித்து 2பேர் காயமடைந்துள்ளனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் மட்டும் தினமும் ஐந்து பேர் வரை தடுப்பூசி செலுத்திகின்றனர். சத்திரக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கு பலர் பாதிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்துகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதோடு, நோய்வாய்ப்பட்டுள்ள நாய்களை சிகிச்சை அளிக்க வேண்டும்.