ADDED : அக் 16, 2025 05:00 AM
திருவாடானை: பொது இடங்களில் புகை பிடித்த 5 பேருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர்.
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை வட்டார மேற்பார்வை யாளர் சந்தனராஜ் தலைமையில் உள்ள இக்குழுவினர் நேற்று திருவாடானையில் பஸ் ஸ்டாண்ட், சன்னதி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆய்வு செய்தனர்.
அப்போது மக்கள் கூடும் இடங்களில் சிகரெட் புகைத்த 5 பேருக்கும், கடைகளில் புகையிலை விற்ற 5 பேருக்கும் மொத்தம் 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இது குறித்து சந்தனராஜ் கூறுகையில், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவாடானை, தொண்டி பகுதி யில் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டு வருகிறது. புகையிலை பொருட்கள் உபயோகத்தால் வாய்ப்புற்று நோய், கை, கால்கள் செயலிழத்தல், நினைவு தடுமாற்றம் என பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என எடுத்துரைக்கப்பட்டது என்றார்.