/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலாந்தரவையில் வாள்களுடன் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது
/
வாலாந்தரவையில் வாள்களுடன் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது
வாலாந்தரவையில் வாள்களுடன் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது
வாலாந்தரவையில் வாள்களுடன் ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது
ADDED : ஜன 21, 2025 05:42 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை பகுதியில் நீண்ட வாள்களுடன் ரோட்டில் ரகளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கேணிக்கரை எஸ்.ஐ., வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வாலாந்தரவை பகுதியில் ரோட்டில் நீண்ட வாளுடன் அப்பகுதியில் செல்பவர்களை மிரட்டி ரகளையில் ஈடுபட்டவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். 3 வாள்களை பறிமுதல் செய்தனர். இதில் வாலாந்தரவை அம்மன்கோவில் தெரு  முனியசாமி 44,  கமுதி முஷ்டக்குறிச்சியை சேர்ந்தவர் தற்போது மதுரை கீரைத்துறை பசும்பொன் நகரில் வசித்து வரும்  முத்துப்பாண்டி 37,  சைவத்துரை 36, கமுதி தாலுகா சேந்தனேந்தலை  சேர்ந்தவர் தற்போது மதுரை அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் குருமூர்த்தி 30, வாலாந்தரவை அண்ணாநகர்  அஜித் 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.