/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 50 கிலோ கடல் குதிரை பறிமுதல் ஒருவர் கைது

ADDED : ஏப் 19, 2025 01:13 AM

தேவிபட்டினம்:ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பதப்படுத்தப்பட்ட 50 கிலோ கடல் குதிரைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
தேவிபட்டினம் அருகே சித்தார்கோட்டையில் கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்டவைகள் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரைன் போலீஸ் எஸ்.ஐ., தாரிக்குல் அமீனுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் ஏழு சாக்கு பைகளில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட 50 கிலோ கடல் குதிரைகளை பறிமுதல் செய்தனர். இவற்றை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த வாஜிது மகன் ஹபீப் 38, கைது செய்யப்பட்டார்.