/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் சந்தையில் சாத்துக்குடி கிலோ ரூ.50
/
ராமநாதபுரம் சந்தையில் சாத்துக்குடி கிலோ ரூ.50
ADDED : செப் 19, 2024 04:36 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பகுதிக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்துஉள்ளதால் சாத்துக்குடி பழம் கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் குறைந்த அளவே சாகுபடி நடக்கிறது. குறிப்பாக ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து ராமநாதபுரம் வாரச்சந்தையில் விற்கின்றனர்.
தற்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் சந்தைக்கு சாத்துக்குடி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த மாதம் கிலோ ரூ.70 வரை விற்றது விலை குறைந்து ரூ.50க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.