/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
50 கிராமத்தினர் குடிநீருக்கு தவிப்பு ரோட்டோர பணியால் தண்ணீர் வருவதில் சிக்கல்

ADDED : பிப் 16, 2024 05:01 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் ரோட்டோரத்தில் நடக்கும் பாலம் கட்டுமானப் பணிகளால் குடிநீர் பைப் உடைந்து 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலை மேல்பனையூர் பாலத்தில்இருந்து கூடலுார், நத்தக்கோட்டை, ஆயங்குடி வழியாக ஆனந்துார் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டோரத்தில் பல பகுதிகளில் பாலம் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில் ஆயங்குடி, கூடலுார், நத்தக்கோட்டை, கொக்கூரணி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எலிக்குளம் பகுதியில் இருந்து புளிச்சவயல் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் காவனக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
அப்பகுதி கிராமங்களுக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் ரோட்டோரத்தில் பதிக்கப்பட்டுள்ளதால் தற்போது ரோடு பணி நடக்கும் நிலையில் பைப்புகள் ஆங்காங்கே சேதமடைந்து தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது.
இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக ஆயங்குடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடையின்றி குடிநீர் வழங்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.