ADDED : ஆக 29, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாக புகார்கள் வந்தது. இதன் பேரில் நகராட்சி கமிஷன்(பொ) குமரன் உத்தரவில் அலுவலர்கள் ராமநாதபுரம் மீன் மார்க்கெட் பகுதிகளில் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வணிக வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், கப் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது.
மேலும் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர். தடையுள்ள பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப்புகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். –––
