ADDED : டிச 08, 2025 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: கொடி நாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் 500 பனை விதைகள் நடப்பட்டன.
நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி திரட்டுவதற்காக 'கொடி நாள்' கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டி மாடக்கொட்டான் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அருகில் உள்ள குளத்தை சுற்றியுள்ள பகுதியில் 500 பனை விதைகள் நடப்பட்டன. இளமனுார் முன்னாள் ஊராட்சி துணை தலைவர் கோயில்கண்ணன், தலைமை காவலர் சீதா பனை விதைகளை நட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் ஏற்பாடுகளை செய்தார்.

