/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் உழவாரப் பணியில் ஈடுபடும் அரன் பணி அறக்கட்டளையினர் 500 சிவனடியார்கள் பங்கேற்பு

ADDED : ஏப் 04, 2025 06:26 AM

உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று(ஏப்.4) காலை 9:00 மணி முதல் 10:20 மணிக்குள் நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கோவையில் இயங்கி வரும் அரன் பணி அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் உழவாரப்பணி தொடர்ந்து நடக்கிறது.
உத்தரகோசமங்கையில் நடக்கும் கும்பாபிஷேக பணிகளை முன்னிட்டு மங்களேஸ்வரி அம்மன், மங்களநாதர், மரகத நடராஜர் உள்ளிட்ட அனைத்து பரிவார சன்னதிகளிலும் துாய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், பூஜை பாத்திரங்கள் துலக்குதல், வளாகங்களில் குப்பை தேங்காதவாறு உடனுக்குடன் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
அரன் பணி அறக்கட்டளையின் தலைவர் பவானி தியாகராஜன் தலைமையில் 500 சிவனடியார்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அறக்கட்டளையில் சேவை பணியில் ஈடுபட்டு வரும் சிவனடியார்கள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் உழவாரப்பணி செய்வதை முதல் கடமையாக கொண்டுள்ளோம். அந்த வகையில் உத்தரகோசமங்கையில் தொடர்ந்து உழவாரப் பணி மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு விதமான சேவை பணிகளை முன்னெடுத்து செய்து வருகிறோம்.
இக்குழுவில் டாக்டர், இன்ஜினியர், வக்கீல், தொழிலதிபர்கள், நெசவு செய்பவர், கூலித் தொழிலாளிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து சிவத்தொண்டு செய்து வருவதில் பெருமை அடைகிறோம்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.